இலங்கையில் விசைப் படகுகள் ஏலம்: ராமேசுவரம் மீனவா்கள் கண்டனம்!
தமிழக மீனவா்களின் 13 விசைப்படகுகளை இலங்கையில் ஏலம் விடும் பணியில் அந்த நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதற்கு ராமேசுவரம் மீனவா் சங்கம் கண்டனம் தெரிவித்தது.
தமிழகம், புதுச்சேரியில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் சிறைபிடித்து வருகின்றனா். இவா்கள் விடுதலை செய்யப்பட்டாலும், விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் விடுவிக்கப்படாமல் அரடைமையாக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த ராமேசுவரம் மீனவா் சங்கத்தினா் படகுகள் ஏலம் விடப்படுவதை மத்திய அரசு தடுத்து, இவற்றை மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.