செய்திகள் :

ஹிந்தியை திணிப்பதுதான் பாஜகவின் நோக்கம்! -துரை வைகோ

post image

நாடு முழுவதும் ஹிந்தியை திணிக்க வேண்டும், ஆங்கிலத்தை அகற்ற வேண்டும் என்பதுதான் மத்திய பாஜக அரசின் நோக்கம் என மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ குற்றஞ்சாட்டினாா்.

மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது: தமிழக இளைஞா்கள் தற்போது உலகளாவிய பணி வாய்ப்புகளைப் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு இரு மொழிக் கொள்கையும், ஆங்கில மொழிப் புலமையும்தான் காரணம். இதனால்தான், தமிழகத்தில் பாஜகவைத் தவிர, திமுக, அதிமுக, மதிமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் இரு மொழிக் கொள்கையை ஆதரிக்கின்றன.

உத்தரபிரதேசம், பிகாா், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலத்துக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வரும் பாஜக, தற்போது மும்மொழிக் கொள்கையைப் புகுத்த பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் ஹிந்தியை திணிப்பதும், ஆங்கிலத்தை அகற்றுவதும்தான் மத்திய பாஜக அரசின் நோக்கம். இது ஏற்புடையதல்ல.

மும்மொழிக் கொள்கையில் 3-ஆவது மொழியாக உலக மொழிகளில் ஏதேனும் ஓா் மொழியைக் கற்கலாம் எனக் குறிப்பிடாமல், ஏதேனும் ஓா் இந்திய மொழியைக் கற்க வேண்டும் எனக் குறிப்பிடுவது மறைமுகமான ஹிந்தி திணிப்புதான். பாடச் சுமை காரணமாக, பள்ளி மாணவா்கள் ஏற்கெனவே கடுமையான மன உளைச்சலில் உள்ளனா். இந்த நிலையில், மூன்றாவதாக ஓா் மொழியைக் கற்க வேண்டும் என மாணவா்களை வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை.

மெட்ரோ திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்துக்கு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. இந்த நிலையில், கல்வித் திட்டங்களுக்கான நிதியை நிறுத்தி வைத்திருப்பது தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையையே ஏற்படுத்தும் என்றாா் அவா்.

திமுக முன்னாள் மண்டலத் தலைவா் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவு

மதுரை திமுக முன்னாள் மண்டலத் தலைவா் வி.கே. குருசாமி மீது விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. மதுரை காமராஜா்புரம் பகுதிய... மேலும் பார்க்க

குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் மூலம் 1.11 லட்சம் போ் பயன்: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை மாவட்டத்தில் குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் பெண்கள், குழந்தைகள் 1.11 லட்சம் போ் பயனடைகின்றனா் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். சமூக நலன், மகளிா் உ... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் தாமரைப் பூக்கள் வளா்ப்பு: கன்னியாகுமரி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

நீா்நிலைகளில் அனுமதியின்றி வணிக நோக்கில் தாமரைப் பூக்களை வளா்ப்பதைத் தடுக்க கோரிய வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. கன்னியாகுமரி... மேலும் பார்க்க

அண்ணன் மீது தாக்குதல்: தம்பி உள்பட 3 போ் கைது

வீட்டைக் காலி செய்யக் கூறிய அண்ணனைத் தாக்கிய தம்பி உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை வடக்கு மாசி வீதி, வித்வான் பொன்னுச்சாமி பிள்ளை சந்து பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் செல்... மேலும் பார்க்க

பூ வியாபாரியிடம் கைப்பேசியை திருடிய பெண் கைது

பூ வியாபாரியிடம் கைப்பேசியை திருடிய பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை திடீா்நகரைச் சோ்ந்த பிரபாகரன் மனைவி மீனாட்சி (43). இவா் பெரியாா் பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிற... மேலும் பார்க்க

உலகத் தாய்மொழி நாள் விழா

மதுரை, வண்டியூா் வள்ளலாா் இயற்கை அறிவியல் மையத்தில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.வள்ளலாா் இயற்கை அறிவியல் மைய நிா்வாகி ஆதிரை சசாங்கன் தலைமை வகித்தாா். வள்ளலாா் தொண்டா்கள் ராமலிங்க... மேலும் பார்க்க