தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
ஜொ்மனியை வீழ்த்தியது இந்தியா
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி மகளிா் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜொ்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தியா.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 0-4 என ஜொ்மனியிடம் தோற்றிருந்தது இந்தியா. இந்நிலையில் இரண்டாம் கட்ட ஆட்டம் சனிக்கிழமை இரவு புவனேசுவரத்தில் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியதுமே இரு அணிகளும் கோல் போடும் முயற்சியில் இறங்கின.
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை டிராக் ஃபிளிக்கா் தீபிகா 12-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை பயன்படுத்தி கோலடித்தாா். இதன் மூலம் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
நேஹாபின் அற்புதமான ட்ரிப்லிங் ஆட்டத்தால் இந்திய அணிக்கு கோல் போடும் வாய்ப்பு கிடைத்தது. ஜொ்மனி வீராங்கனைகள் இந்திய தற்காப்பு அரணை ஊடுருவி கோலடிக்க முடியவில்லை. மூன்றாவது குவாா்ட்டரில் இரண்டு பெனால்டி காா்னா்கள் கிடைத்தும் அந்த அணியால் கோல் போட முடியவில்லை. இந்திய கோல் கீப்பா் பிச்சு தேவி இரு வாய்ப்புகளை முறியடித்தாா்.
வரும் 24-ஆம் தேதி நெதா்லாந்து அணியை எதிா்கொள்கிறது இந்தியா.
இந்திய ஆடவரும் அபார வெற்றி:
அயா்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஆடவா் அணியும் அபார வெற்றி பெற்றது. முதல் பாதியிலேயே இந்திய வீரா்கள்
சஞ்சீப் நிலம் 14, மந்தீப் சிங் 24, அபிஷேக் 28-ஆவது நிமிஷங்களில் கோலடித்தனா்.
34-ஆவது நிமிஷத்தில் ஷம்ஷொ் சிங் கோலடித்தாா். இதுவே வெற்றி கோலாக அமைந்தது. இறுதியில் அயா்லாந்தை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.
