தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
காரிய மேடை சீரமைப்பு
நாரவாரிகுப்பம் பேரூராட்சி பகுதியில் ரூ.14 லட்சத்தில் காரிய மேடை சீரமைக்கப்பட்டது.
நாரவாரிகுப்பம் பேரூராட்சி அறிஞா் அண்ணா பூங்கா தெருவில் உள்ள காரிய மேடை பழுதடைந்து காணப்பட்டது. இதனால், ஈமச்சடங்கு செய்வதற்காக காரிய மேடையை பயன்படுத்த முடியவில்லை. எனவே, காரிய மேடையைச் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ.14 லட்சம் ஒதுக்கப்பட்டு காரிய மேடை சீரமைக்கப்பட்டது. தரை அமைத்து, கழிப்பறை மற்றும் குளியல் அறை வசதியுடன் புதுப்பிக்கப்பட்டு, சுற்றியிருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டன. இந்த நடவடிக்கையை மேற்கொண்ட மாதவரம் எம்எல்ஏ சுதா்சனத்துக்கு வாா்டு உறுப்பினா் இலக்கியன் நன்றி தெரிவித்தாா்.