செய்திகள் :

நல்லது கெட்டது இணைந்ததுதான் தக் லைஃப்: கமல் ஹாசன்

post image

நடிகர் கமல் ஹாசன் தக் லைஃப் படம் குறித்து பேசியுள்ளார்.

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தில்லி, ரஷியா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது.

நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதையும் படிக்க: ‘எந்த சாதியிலும் பெண்கள் ஆண்களுக்குக் கீழ்தான்’ ஜென்டில்வுமன் டிரைலர்!

இப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் ஓடிடி மற்றும் வெளியீட்டு உரிமங்கள் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கமல் ஹாசனிடம், “தக் லைஃப்பில் ரங்கராஜ சக்திவேல் நாயக்கர் நல்லவரா இல்லை கெட்டவரா? எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு கமல்,“கணக்கிற்கு கூட்டல் முக்கியமா இல்லை கழித்தல் முக்கியமா என்றால் எதை சொல்ல முடியும்? நல்லதும் கெட்டதும் இணைந்ததுதான் தக் லைஃப்” என்றார்.

யுபி வாரியா்ஸ் 177/9

டில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான டபிள்யுபிஎல் ஆட்டத்தில் யு பி வாரியா்ஸ் அணி 177/9 ரன்களைக் குவித்தது. இரு அணிகளுக்கு இடையிலானஆட்டம் பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்றது. முதலில் ஆடிய யு பி வாரியா்ஸ் அணி ... மேலும் பார்க்க

ஜொ்மனியை வீழ்த்தியது இந்தியா

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி மகளிா் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜொ்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தியா. வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 0-4 என ஜொ்மனியிடம் தோற்றிருந்தது இந்தியா. இந்நிலையி... மேலும் பார்க்க

நானி - சிபி சக்ரவர்த்தி கூட்டணி?

நடிகர் நானி இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டான் படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் சிபி சக்ரவர்த்தி அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கும்... மேலும் பார்க்க

மோகன்லால் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன்!

நடிகர்கள் மோகன்லால், மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தைத் த... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி த்ரிஷா கதாபாத்திரம் அறிமுகம்!

நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் த்ரிஷா கதாபாத்திரம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீது ரசிகர்கள... மேலும் பார்க்க

தேவர் மகன், நாயகனை 30 முறைக்குமேல் பார்த்திருக்கிறேன்: த்ரிஷா

நடிகை த்ரிஷா கமல் ஹாசன் படங்கள் குறித்து பேசியுள்ளார்.கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்... மேலும் பார்க்க