துபையில் வெற்றி பெற எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்? ஷுப்மன் கில் பதில்!
துபையில் விளையாடும் போட்டிகளில் வெற்றி பெற ஒரு அணி எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அண்மையில் தொடங்கியது. அனைத்துப் போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகின்றன.
இதையும் படிக்க: மகனுடன் இணைந்து பேட்டிங் செய்த ராகுல் டிராவிட்!
இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெற்றியுடன் தொடங்கியது. முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்துள்ள பாகிஸ்தானை எதிர்த்து, இந்திய அணி நாளை துபையில் நடைபெறும் போட்டியில் விளையாடவுள்ளது.
300 - 325 ரன்கள் மிக நல்ல ஸ்கோர்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நாளை விளையாடவுள்ள நிலையில், துபை ஆடுகளத்தில் 300 - 325 ரன்கள் மிகவும் சிறந்த ஸ்கோர் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் அனைத்துப் போட்டிகளிலும் கண்டிப்பாக நேர்மறையான எண்ணங்களுடனும், ஆக்ரோஷமாகவும் விளையாட வேண்டும். துபை ஆடுகளங்களில் 300 - 325 ரன்கள் மிகவும் நல்ல ஸ்கோர். ஆட்டத்தின் மிடில் ஓவர்களில் நன்றாக பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். இங்கு பனிப்பொழிவு இல்லாததால் டாஸ் வெல்வது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இரண்டாவது பேட்டிங் செய்யும் அணியின் மீது அதிகப்படியான அழுத்தம் இருக்கும் என்றார்.