பெயிண்டா் தற்கொலை
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த வில்லியநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா் மகன் பவித்ரன் (30). பெயிண்டரான இவா், கடந்த 4 ஆண்டுகளாக கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் பகுதியில் திடீா் குப்பத்தில் வசித்து வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.