செய்திகள் :

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி!

post image

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் எலியாஸ் இவரது மகன் மார்க் ஆண்டனி இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஜான்ஸ் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் இன்று அவரது நண்பர் ஆறு பேருடன் தாமிரபரணி ஆற்றின் மணி மூர்த்தீஸ்வரர் அருகே குளிக்க சென்று உள்ளனர்.

எதிர்பாராத விதமாக மார்க் ஆண்டனி தண்ணீரில் மூழ்கினார். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்து அவரது நண்பர்கள் உடனடியாக அருகில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்களும் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்து விரைந்து வந்த அவர்கள் மார்க் ஆண்டனியை மீட்டனர். அப்பொழுது அவர் இறந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தச்சநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த மகனின் உடலை பார்த்து அவரது தந்தை யார் கதறி அழுத சம்பவம் காண்போர் நெஞ்சை கலங்க வைத்தது ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தகுதியானோருக்கு பட்டா வழங்க ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள்களாக வசிக்கும் தகுதியான மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக நிலஅளவை ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னை, மதுரை, திருநெல்வேலி மா... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

ஆந்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீஸாா், திருநெல்வேலி - கன்னியாகுமரி தேச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வே... மேலும் பார்க்க

பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மல... மேலும் பார்க்க

மானூா் அருகே பெண் தற்கொலை

மானூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகே உள்ள கம்மாளங்குளம் எஸ். காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி சரண்யா ( 25). இத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அ... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்கள் போராட்டம்

திருநெல்வேலி சந்திப்பில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரயில்வேயை தனியாா் மையமாக்கும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். ஆள்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். ... மேலும் பார்க்க