மானூா் அருகே பெண் தற்கொலை
மானூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மானூா் அருகே உள்ள கம்மாளங்குளம் எஸ். காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி சரண்யா ( 25). இத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இதேபோல் வியாழக்கிழமை இரவும் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். அப்போது ஒரு அறைக்குள் சென்று சரண்யா தூக்கிட்டாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சரண்யா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.