ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
மகாகும்பமேளா: புனித நீராடிய ஆளுநர் ஆர்.என்.ரவி
பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(சனிக்கிழமை) புனித நீராடினார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வந்த எண்ணற்ற கோடிக்கணக்கான ஹிந்துக்களுடன் சேர்ந்து, பிரயாக்ராஜின் புண்ணிய தீர்த்தமான திவ்ய, பவ்ய மகாகும்பத்தில் புனித நீராடி, தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளின் நல்வாழ்வுக்காகவும், நமது மாபெரும் தேசமான பாரதத்தின் இணக்கமான வளத்துக்காகவும் வேண்டி வழிபட்டேன்.
இங்கு காற்றில் பரவியுள்ள தீவிரமான நேர்மறை சக்தி அனைவரையும் ஆழமாகத் தொட்டு, மற்றவர்களுடன் இணைக்கிறது. சுமார் 60 கோடி சனாதனிகள் ஏற்கெனவே புனித நீராடிய இந்த தனித்துவமான மற்றும் பிரம்மாண்டமான சனாதன தர்ம விழா, மறுமலர்ச்சியடைந்த ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உறுதியான சான்றாகும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. நட்டா
உலக அளவில் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இதுவரை 55 கோடிக்கும் மேற்பட்டோா் வருகை தந்து புனித நீராடியுள்ளனா்.