கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா-சென்னை இடையே ஜல்பைகுரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் பலாசோரில் உள்ள சபிரா ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை திடீரென தடம்புரண்டது.
தண்டவாளத்தையொட்டி இருந்த மின்கம்பத்தில் ரயில் மோதியதால் தடம்புரண்டதாக கூறப்படுகிறது.
கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்
இருப்பினும் இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தென்கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஓம் பிரகாஷ் சரண் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
விபத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் மக்கள் ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு நிலவியது.