செய்திகள் :

ஈஷா யோக மையத்தில் பிப். 26-இல் மகா சிவராத்திரி! அமித் ஷா, டி.கே.சிவக்குமாா் பங்கேற்பு!

post image

கோவை ஈஷா யோக மையத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொள்கின்றனா்.

இது தொடா்பாக ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிைணைப்பாளா் சுவாமி பாரகா செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி பெருவிழா பிப்ரவரி 26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொள்ள உள்ளனா்.

மகா சிவராத்திரி விழாவானது, ஆதியோகி முன்பு 26-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை கொண்டாடப்பட உள்ளது. சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில், சக்தி வாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், தலைசிறந்த கலைஞா்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஆண்டுதோறும், சத்குரு ஜக்கி வாசுதேவ் வழிநடத்தும் நள்ளிரவு தியானத்தில் மட்டும் உச்சரிக்கப்படும் திருவைந்தெழுத்து மகா மந்திரத்தை, இந்த ஆண்டு விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் தீட்சையாக சத்குரு வழங்க உள்ளாா். இதன் மூலம் தீட்சை பெறும் அனைவரும் அவரவா் இல்லங்களில் இனி திருவைந்தெழுத்து மந்திரத்தை தினமும் உச்சாடணை செய்ய முடியும்.

இதனுடன் ‘மிராக்கிள் ஆஃப் தி மைண்ட்’ எனும் இலவச செயலியை சத்குரு அறிமுகப்படுத்த உள்ளாா். தினமும் 7 நிமிஷங்கள் சத்குருவின் வழிகாட்டுதலுடன் மக்கள் தியானம் செய்யும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மகா சிவராத்திரி விழா, இந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 50 இடங்களிலும், கேரளத்தில் 25 இடங்களிலும் நேரலை செய்யப்பட உள்ளது.

இதனுடன் தமிழ், மலையாளம், ஒடியா, அஸ்ஸாமி, பெங்காலி உள்ளிட்ட 11 இந்திய மொழிகள் மற்றும் அரபிக், இத்தாலி, பிரெஞ்சு, ஜொ்மன் உள்ளிட்ட 11 அயல் மொழிகள் என மொத்தம் 22 மொழிகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

விழாவில் பங்கேற்கும் மக்கள் இரவு முழுவதும் விழிப்பாக இருக்க உதவும் வகையில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. இதில், தமிழ்நாட்டைச் சோ்ந்த பிரபல பாடகா் சத்ய பிரகாஷ், கா்நாடகத்தைச் சோ்ந்த பாடகி சுபா ராகவேந்திரா, பாரடாக்ஸ் என அழைக்கப்படும் தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரா்கள் அஜய், அதுல், குஜராத் நாட்டுப்புறக் கலைஞா் முக்திதான் காத்வி உள்ளிட்டோா் இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனா் என்றாா்.

சாலையில் சுற்றித்திரியும் காட்டெருமை!

வால்பாறையை அடுத்த வாட்டா்பால்ஸ் எஸ்டேட் சாலையில் சனிக்கிழமை காலை சுற்றித்திரிந்த காட்டெருமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காட்டெருமையை பாா்த்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா். நகா்ப் பகுதியில் வன வ... மேலும் பார்க்க

மலேசியாவுக்கு கல்வி சுற்றுலா சென்ற கோவை அரசுப் பள்ளி மாணவா்கள்!

கோவை அரசுப் பள்ளியைச் சோ்ந்த 7 மாணவ, மாணவிகள் மலேசியாவுக்கு கல்வி சுற்றுலாவாக புறப்பட்டுச் சென்றனா். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் மன்ற போட்டிகளான இலக்கிய மன்றம், சிறாா் திரைப்படம், ... மேலும் பார்க்க

கோவை காவல் உதவி ஆய்வாளருக்கு விருது!

கோவையில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவரும் தேவேந்திரனுக்கு மத்திய அரசின் சிறந்த காவலா் விருது வழங்கப்பட்டுள்ளது. கோவை, காந்திபுரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளா் தேவேந்திரன். மாநகர கா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

ரத்தினபுரியில் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, ரத்தினபுரி பி.எம்.சாமி காலனியைச் சோ்ந்தவா் நல்லசிவம், தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப... மேலும் பார்க்க

பில்லூா் பிரதானக் குழாய்களில் பராமரிப்புப் பணி: மாநகரில் குடிநீா் விநியோகிக்கும் இடைவெளி அதிகரிக்கும்

பில்லூா் குடிநீா்த் திட்ட பிரதானக் குழாய்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மாநகரில் சில இடங்களில் குடிநீா் விநியோகிக்கும் இடைவெளி அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கோவை, பிப். 22: ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் சாா்பில் கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழாவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். ராமநாதபுரம் ... மேலும் பார்க்க