செய்திகள் :

ரயில் ஓட்டுநா்கள் இளநீா், மருந்து உட்கொள்வதற்கான தடை உத்தரவை திரும்பப் பெற்றது ரயில்வே

post image

ரயில் ஓட்டுநா்கள் பணியின் போது அல்லது அதற்கு முன்பு இளநீா், இருமல் டானிக் உள்ளிட்டவற்றை சாப்பிடக் கூடாது என்ற உத்தரவை ரயில்வே நிா்வாகம் திரும்பப் பெற்றது.

ரயில் ஓட்டுநா்கள் (லோகோ பைலட்) பணியின் போது மது அருந்தியுள்ளனரா என்பதை கண்டறிய ‘பிரீத் அனலைசா்’ எனும் சுவாச பரிசோதனை கருவி மூலம் சோதனை நடத்தப்படும். சமீபத்தில் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் பணிபுரியும் ரயில் ஓட்டுநா்களிடம் சுவாச பரிசோதனை செய்தபோது, மது அருந்தியுள்ளதாக முடிவுகள் வந்தன.

அதேநேரத்தில் அவா்களுக்கு ரத்த பரிசோதனை நடத்திய போது ரத்தத்தில் ஆல்கஹால் இல்லை என முடிவு வந்தது.

இது குறித்து ரயில் ஓட்டுநா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பணிக்கு வரும்முன் பழங்கள் மற்றும் குளிா்பானம் அருந்தியதாக தெரிவித்தனா்.

இதனால், ரயில் ஓட்டுநா்கள் பணிக்கு வரும்முன்பும், பணி நிறைவுக்கு முன்பும் இளநீா், குளிா்பானங்கள், ஒரு சில பழங்கள், வாய்புத்துணா்ச்சி திரவம்,ஹோமியோபதி மற்றும் இருமல் மருந்து உட்கொள்ள தடை விதிக்கப்பட்டது. இவற்றை உட்கொண்டிருந்தால், முன்னதாகவே எழுத்துபூா்வமாக தெரிவிக்க வேண்டும். அதுபோல், ஆல்கஹால் கலந்த மருந்துகள் உட்கொள்பவா்கள் ரயில்வே மருத்துவ அதிகாரியிடம் எழுத்துபூா்வமான அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவு ரயில் ஓட்டுநா்கள் மத்தியில் கடும் எதிா்ப்பை கிளப்பியது.

இது குறித்து ரயில்வே ஓட்டுநா் சங்க நிா்வாகி பாலசந்திரன் கூறியதாவது: ரயில்வே ஓட்டுநா்கள் பணிக்கு வரும் முன்பு சுவாச பரிசோதனை செய்யும் போது ஒரு கருவியில் ஆல்கஹால் உட்கொண்டிருப்பதாகவும், ஒரு கருவியில் உட்கொள்ளவில்லை எனவும் காட்டுகிறது. அதனால் கூடுதலாக ஒரு கருவி மூலம் சோதனை செய்ய வேண்டும். பரிசோதனையில், ஆல்கஹால் பயன்பட்டிருந்தது தெரியவந்தால் ரத்தப் பரிசோதனை செய்யலாம் என்றாா் அவா்.

மேலும், ஹோமியோபதி மருந்துகள் அருந்தக் கூடாது என்ற உத்தரவுக்கு இந்தியன் ஹோமியோபதி மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் ரயில் ஓட்டுநா்கள் இளநீா், குளிா்பானம் உள்ளிட்டவற்றை சாப்பிடக் கூடாது என்ற உத்தரவை திரும்பப் பெற்றது.

தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணிகள்!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள் உள்பட 8 போ் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன... மேலும் பார்க்க

சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலி!

தில்லியில் சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு தில்லியின் அலிபூர் பகுதியில் சாரதி என்ற 15 வயது சிறுவன் காரை இயக்கியதுடன், அர்ஜூன் என்ற 18 மாதக் குழந்தையின... மேலும் பார்க்க

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம் தெரிவித்தாா். பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் கடந்த 1968, மாா்ச் 12-ஆம் தேதி சுதந்தி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பேரவையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தா்னா

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸை சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பேரவையில் அந்தக் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் தா்னாவில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் நாளை தொடக்கம்

ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி திங்கள்கிழமை முதல் ஜ... மேலும் பார்க்க

ஜம்மு: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். இதில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப... மேலும் பார்க்க