3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி
பிரதமர் மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பிகார், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
பிப்ரவரி 23ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லும் அவர், பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தொடர்ந்து பிப்ரவரி 24 ஆம் தேதி போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
அதன்பிறகு, அவர் பிகாரின் பாகல்பூருக்குச் செல்கிறார். அங்கு அவர் பிரதமரின் கிசான் திட்டத்தின் 19-வது தவணைத் தொகையை விடுவிக்கிறார்.
சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை
மேலும் பிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
இதையடுத்து அசாமின் குவஹாத்திக்குச் செல்லும் அவர் ஜுமோயர் பினாந்தினி (மெகா ஜுமோயர்) 2025 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பின்னர் பிப்ரவரி 25ஆம் தேதி குவஹாத்தியில் அட்வான்டேஜ் அசாம் 2.0 முதலீடு, உள்கட்டமைப்பு உச்சி மாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்.