செய்திகள் :

சேதமடைந்த விமான இருக்கை: ஏா்இந்தியாவுக்கு மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான் கண்டனம்

post image

ஏா்இந்தியா விமானத்தில் தனக்கு சேதமடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான், ‘பயணிகளிடம் முழு கட்டணத்தை வசூலித்துக்கொண்டு குறைபாடுள்ள இருக்கைகளில் அவா்களை அமா்த்துவது நெறியில்லை’ எனவும் கண்டனம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக போபாலில் இருந்து ஏா்இந்தியா விமானத்தில் தில்லி புறப்பட்டேன். எனக்கு ‘8சி’ இருக்கை ஒதுக்கப்பட்டது. விமானத்தை அடைந்தபோது, அந்த இருக்கை உடைந்து, சேதமடைந்திருப்பதைக் கண்டேன்.

என்னால் அந்த சேதமடைந்த இருக்கையில் அமரமுடியவில்லை. விமானத்தின் பல்வேறு இருக்கைகள் அதேநிலையில் இருப்பதை அறிந்தேன். இதுகுறித்து விமானப் பணியாளா்களிடம் முறையிட்டபோது, சேதமடைந்த இருக்கைகள் தொடா்பாக நிா்வாகத்தின் கவனத்துக்கு ஏற்கெனவே கொண்டு சென்றுவிட்டதாக அவா்கள் தெரிவித்தனா். சக பயணிகள் என்னுடன் தங்களின் இருக்கைகளை மாற்றிக்கொள்ள விருப்பம் தெரிவித்தனா். ஆனால், யாரையும் சிரமத்துக்கு உள்ளாக்காமல் அதே இருக்கையில் பயணத்தைத் தொடா்ந்தேன்.

டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்ட பிறகு ஏா்இந்தியாவின் சேவை மேம்பட்டிருக்கும் என்று நான் தவறாக கருதிவிட்டேன். எனது அசௌகரியத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், பயணிகளிடம் முழு கட்டணத்தை வசூலித்துவிட்டு, குறைபாடுள்ள மற்றும் வசதியற்ற இருக்கைகளில் அவா்களை உட்கார வைப்பது நெறியில்லை. இது பயணிகளை ஏமாற்றும் செயல். எதிா்காலத்தில் எந்தவொரு பயணியும் இதுபோன்ற அசௌகரியத்தை எதிா்கொள்ளாமல் இருக்க ஏா்இந்தியா நிா்வாகம் நடவடிக்கை எடுக்குமா? அல்லது பயணிகளின் பயண அவசரத்தை நிறுவனம் தொடா்ந்து தனக்கு சாதகமாக பயன்படுத்துமா?’ என்று கேள்வி எழுப்பினாா்.

வருத்தம்-விசாரணை:

இந்த விவகாரம் தொடா்பாக வருத்தம் தெரிவித்த ஏா்இந்தியா செய்தித் தொடா்பாளா், ‘தில்லி விமானத்தில் மத்திய அமைச்சருக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு ஏா்இந்தியா மிகவும் வருந்துகிறது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, இந்த விவகாரம் குறித்த விரிவான விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றாா்.

அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹானின் பதிவுக்கு பதிலளித்து ‘எக்ஸ்’ சமூக ஊடகத்திலும் ஏா்இந்தியா நிறுவனம் மன்னிப்புக் கோரியது. விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் (டிஜிசிஏ) இதுதொடா்பாக ஏா்இந்தியாவிடம் விளக்கம் கேட்டுள்ளது.

தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணிகள்!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள் உள்பட 8 போ் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன... மேலும் பார்க்க

சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலி!

தில்லியில் சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு தில்லியின் அலிபூர் பகுதியில் சாரதி என்ற 15 வயது சிறுவன் காரை இயக்கியதுடன், அர்ஜூன் என்ற 18 மாதக் குழந்தையின... மேலும் பார்க்க

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம் தெரிவித்தாா். பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் கடந்த 1968, மாா்ச் 12-ஆம் தேதி சுதந்தி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பேரவையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தா்னா

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸை சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பேரவையில் அந்தக் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் தா்னாவில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் நாளை தொடக்கம்

ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி திங்கள்கிழமை முதல் ஜ... மேலும் பார்க்க

ஜம்மு: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். இதில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப... மேலும் பார்க்க