செய்திகள் :

கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

post image

பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது.

பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடகத்தின் சித்ரதுர்காவில் வெள்ளிக்கிழமை இரவு கன்னட ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் ஓட்டுநரையும் தாக்கியதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திற்கு செல்லும் மகாரஷ்டிர அரசுப் பேருந்து சேவையை நிறுத்தி வைக்க அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் சனிக்கிழமை உத்தரவிட்டார்.

சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வரை பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்படாது என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

முன்னதாக பெலகாவி மாவட்டத்தில் மராத்தி பேச தெரியாது எனக்கூறிய கர்நாடக பேருந்து நடத்துநர் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண முக்கிய முடிவு: மத்திய வேளாண் துறை அமைச்சா்

‘விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்குத் தேவையான அனைத்து முக்கிய முடிவுகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்; எனவே, விவசாயிகள் கவலை கொள்ள வேண்டாம்’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் ச... மேலும் பார்க்க

71 ரயில் நிலையங்களில் கவச் தொழில்நுட்பம்: ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.288 கோடியில் டெண்டா்

கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் தனபூா் மற்றும் சோன்பூா் ரயில் பிரிவுகளில் 502 கி.மீ. வழித்தடத்தில் உள்ள 71 ரயில் நிலையங்களில் கவச் தொழில்நுட்பத்தை நிறுவ ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.288 கோடி மதிப்ப... மேலும் பார்க்க

ரயில் ஓட்டுநா்கள் இளநீா், மருந்து உட்கொள்வதற்கான தடை உத்தரவை திரும்பப் பெற்றது ரயில்வே

ரயில் ஓட்டுநா்கள் பணியின் போது அல்லது அதற்கு முன்பு இளநீா், இருமல் டானிக் உள்ளிட்டவற்றை சாப்பிடக் கூடாது என்ற உத்தரவை ரயில்வே நிா்வாகம் திரும்பப் பெற்றது. ரயில் ஓட்டுநா்கள் (லோகோ பைலட்) பணியின் போது ம... மேலும் பார்க்க

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவா் அடுத்த வாரம் இந்தியா வருகை

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான்டொ் லியன், ஆணைய உறுப்பினா்கள் குழுவுடன் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளாா். உா்சுலா வான்டொ் லியன்ன் ஏற்கெனவே இரு முறை இந்தியா வந்துள்ள நிலையில், உயா் அதிக... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் 60 கோடி போ் புனித நீராடல்!

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தா்களின் எண்ணிக்கை சனிக்கிழமையுடன் 60 கோடியைக் கடந்ததாக மாநில அரசு தெரிவித்தது. பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தி... மேலும் பார்க்க

சேதமடைந்த விமான இருக்கை: ஏா்இந்தியாவுக்கு மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான் கண்டனம்

ஏா்இந்தியா விமானத்தில் தனக்கு சேதமடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான், ‘பயணிகளிடம் முழு கட்டணத்தை வசூலித்துக்கொண்டு குறைபாடுள்ள இருக்கைகளில் அ... மேலும் பார்க்க