ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!
தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார்.
பிப்ரவரி 20 அன்று ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது இருவரும் சந்திப்பு மேற்கொண்டனர். இந்நிகழ்வின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல்வேறு தலைவர்களும் இருந்தனர்.
முன்னதாக இன்று தேசிய தலைநகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, சேதமடைந்த சாலைகளைச் சீர்செய்வது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் குப்தா ஒரு சந்திப்பை மேற்கொண்டார். அப்போது சேதமடைந்த சாலைகள், போக்குவரத்து தொடர்பான அனைத்து பிரச்னைகளும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார் என்று பாஜகவின் எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தில்லியின் பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா, பைரோன் மார்க் முதல் சராய் காலே கான், ரிங் ரோடு வரை துறையின் திட்டங்களை ஆய்வு செய்தார்.
தில்லியின் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அதிஷி, தில்லி அரசு பெண்களுக்கு ரூ.2,500 வழங்கும் திட்டத்தை இன்னும் நிறைவேற்றாதது குறித்து தனது கவலையைத் தெரிவித்து முதல்வர் ரேகா குப்தாவுக்கு கடிதம் எழுதினார். மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க தில்லி முதல்வரை சந்திக்க ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.