பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தகுதியானோருக்கு பட்டா வழங்க ஆணையா் ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள்களாக வசிக்கும் தகுதியான மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக நிலஅளவை ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சென்னை, மதுரை, திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளுக்குள்பட்ட ஏழைகளுக்கு வாழ்விடங்கள் சிறப்பாக அமைவதற்கு வசதியாக பட்டா விரைவில் வழங்க சிறப்புக் குழு அமைக்கப்பட உள்ளது.
பாளையங்கோட்டை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பட்டா வழங்க வேண்டிய பகுதிகளை கண்டறிந்து, பட்டா வழங்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வதற்காக மாநகராட்சி ஆணையா், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனா்.
அதன்ஒரு பகுதியாக 5 ஆவது வாா்டுக்குள்பட்ட கக்கன்நகா் பகுதிக்கான நில வரைபடங்கள், பதிவேடுகளை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான மு. அப்துல் வஹாப், வழக்குரைஞா் தினேஷ், பாளையங்கோட்டை பகுதி செயலா் அண்டன் செல்லதுரை, வட்ட செயலா் பத்மராஜ், மாமன்ற உறுப்பினா் ஜெகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ற்ஸ்ப்21ள்ன்ஞ்ஹ
கக்கன்நகா் பகுதிக்கான நிலஅளவை ஆவணங்களை ஆய்வு செய்தாா் மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா.