செய்திகள் :

10 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே சாப்பிடும் ஷமி..!

post image

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார்.

சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 2ஆவது வீரர், குறைந்த பந்துகளில் (5,126 பந்துகள்) 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் முகமது ஷமி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்துக்கு எதிரான நேற்றையப் (பிப்.20) போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முகமது ஷமி 10 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

இந்நிலையில் ஷமி கூறியதாவது:

2015க்குப் பிறகு நான் ஒருவேளை உணவு மட்டுமே உண்ணுகிறேன். காலை, மதியம் உண்ணாமல் இரவு உணவு மட்டும் உண்கிறேன். இந்த விஷயங்கள் எல்லாம் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், பழகிவிட்டால் எளிமையாகிவிடும்.

என்சிஏவில் இருக்கும்போது எனது உடல் எடை 90கிலோவை நெருங்கியது. காயத்திலிருந்து மீண்டு வரும்போது 9 கிலோவைக் குறைத்தேன். இந்த நிலைமையில் இருக்கும்போது உங்களுக்கு நீங்களே சவால் அளித்துகொள்ள வேண்டும்.

சிறந்த விஷயம் என்னவென்றால் நான் சுவையான உணவுகளை உண்ண விரும்புவதில்லை. இனிப்புகளிடம் இருந்து தள்ளியே இருக்கிறேன். எதையெல்லாம் சாப்பிடக்க்கூடாதோ அதிலிருந்து தள்ளியே இருக்கிறேன்.

எப்போதாவது சில சமயங்களில் மட்டும் பிரியாணி சாப்பிடுகிறேன் என்றார்.

பாகிஸ்தானை பழிதீா்க்கும் முனைப்பில் இந்தியா இன்று மோதல்

துபை : கடந்த 2017 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டதற்கு பதிலடி தரும் முனைப்பில் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் ... மேலும் பார்க்க

சேஸிங்கில் புதிய வரலாறு..! 352 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலியா அபாரம்!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 352 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலிய அணி புதிய வரலாறு படைத்துள்ளது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் டாப் 5 தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்கள்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் தனிநபராக அதிக ரன்கள் குவித்து இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சாதனை படைத்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கி... மேலும் பார்க்க

முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்துள்ளது.அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கியது. ஹராரே ஸ்போர்ட்ஸ்... மேலும் பார்க்க

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் காண மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபைய... மேலும் பார்க்க

துபையில் வெற்றி பெற எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்? ஷுப்மன் கில் பதில்!

துபையில் விளையாடும் போட்டிகளில் வெற்றி பெற ஒரு அணி எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அண்மையில் தொடங்கியது. அனைத்த... மேலும் பார்க்க