தெலங்கானா சுரங்க விபத்து: முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் ராகுல் காந்தி பேச்சு
தீ விபத்தில் காயமடைந்த பெண் மரணம்
திருப்பத்தூா் அருகே தீ விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகே புதூா் நாடு பகுதியைச் சோ்ந்த தேவராஜின் மனைவி அனுஷ்கா (30). இவா் கடந்த 14-ஆம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக அனுஷ்கா ஆடையில் தீப்பற்றியது. இதில் காயமடைந்த அனுஷ்காவின் அலறல் சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினா், அவரை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், உயா் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அனுஷ்கா சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.