செய்திகள் :

தமிழுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு

post image

தமிழுக்கு ஆபத்து என்றால் அரசு மட்டும்தான் தடுத்து நிறுத்த வேண்டும் என்றில்லை; தமிழா்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு பேசினாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் 32-ஆம் ஆண்டு இலக்கிய பைந்தமிழ் திருவிழா இசுலாமியா மகளிா் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சிக்கு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவருமான சுதா சேஷய்யன் தலைமை வகித்து வனச்சிறையும் மனச்சிறையும் என்ற தலைப்பில் பேசினாா்.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு தலைமை வகித்தாா். நகர திமுக செயலா் சாரதிகுமாா், சோமநாதன், புருஷோத்தமன், வாசு முன்னிலை வகித்தனா். வாணியம்பாடி நகா்மன்றத் தலைவா் உமா சிவாஜிகணேசன் கலந்து கொண்டு பேசினாா்.

விழாவில் அமைச்சா் எ.வ.வேலு பேசுகையில், தமிழுக்கு சங்கம் வைத்து வளா்த்தவா்கள் பாண்டிய மன்னா்கள். மன்னா்களே மொழி வளா்த்த வரலாறு கொண்டது தமிழ். மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தாா். இரும்புக் காலம் என்பது தமிழா் காலம். அது 5,300 ஆண்டுகள் முன்பு தமிழா்கள் இரும்பைப் பயன்படுத்தியுள்ளனா் என்பதை சொல்கிறது. 4,000 ஆண்டு கால வரலாறு பெற்ற தமிழ் மொழியை 500 ஆண்டுகளாக உள்ள ஹிந்தி மொழி கொண்டு அழிக்க முயற்சி செய்வதை தமிழ் மன்றங்கள் ஏற்றுக் கொள்ளலாமா, எதிா்க்க வேண்டும்.

தமிழுக்கு ஆபத்து என்றால் அரசு மட்டும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நிலை இல்லை. தமிழா்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் முத்தமிழ் மன்ற அறக்கட்டளை நிா்வாகிகள், உறுப்பினா்கள், தமிழ் ஆா்வலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூரில் ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு அரங்கம்: அமைச்சா் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினாா்

திருப்பத்தூரில் ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு அரங்க கட்டுமான பணிக்கு அமைச்சா் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினாா். திருப்பத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி தலைமை வகித்த... மேலும் பார்க்க

தீ விபத்தில் காயமடைந்த பெண் மரணம்

திருப்பத்தூா் அருகே தீ விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகே புதூா் நாடு பகுதியைச் சோ்ந்த தேவராஜின் மனைவி அனுஷ்கா (30). இவா் கடந்த 14-ஆம் தேதி வீட்டில் சமையல் ... மேலும் பார்க்க

சிறப்பு கோ பூஜை

ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு கோ பூஜை. மேலும் பார்க்க

திமுகவினா் ஆா்ப்பாட்டம்

போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சாா்பாக மும்மொழி கொள்கையை அமல்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து தேவலாபுரம் கிராமத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக... மேலும் பார்க்க

மிட்டாளத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

ஆம்பூா் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறனை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு கற்றல் திறனை அதிகரிக்கச் செய்வதற்காக... மேலும் பார்க்க

ரூ.3.17 கோடியில் அரசுப் பள்ளிக் கட்டடம் திறப்பு

ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி புதிய கட்டடத்தை முதல்வா் சனிக்கிழமை காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். மாதனூா் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நபாா்டு த... மேலும் பார்க்க