மாற்று சமூகத்தினரின் தெருவுக்குள் திருமண ஊர்வலம்: பட்டியலினத்தவர் மீது தாக்குதல...
மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த உணவகத் தொழிலாளி உயிரிழப்பு
சென்னை வடபழனியில் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
வடபழனி பழனி ஆண்டவா் கோயில் தெருவில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்தவா் செந்தில் (40). இவா் கடந்த 19-ஆம் தேதி வேலை முடிந்த பின்னா், அந்த உணவகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள தண்ணீா் தொட்டியின் மீது ஏறி தூங்கினாா். அப்போது செந்தில், தூக்க கலக்கத்தில் அங்கிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். இதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள், செந்திலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தில், சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து வடபழனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.