மாற்று சமூகத்தினரின் தெருவுக்குள் திருமண ஊர்வலம்: பட்டியலினத்தவர் மீது தாக்குதல...
காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை
சென்னை கொண்டித்தோப்பில் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
கொண்டித்தோப்பு காவலா் குடியிருப்பில் வசிக்கும் அருண் (27), பூக்கடை காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். அருணுக்கு சொந்த ஊா் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியாகும். அருணுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவா் மனைவி கா்ப்பமாக இருந்ததால் சொந்த ஊருக்கு சென்றிருந்த நிலையில் அருண் மட்டும் தனியாக தங்கியிருந்தாா்.
இந்நிலையில் அருண் வீட்டுக் கதவு வெள்ளிக்கிழமை வெகுநேரம் திறக்கப்படாமலேயே இருந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினா் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது அங்கு அருண் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அவா்கள், அருணை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அருணை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது தொடா்பாக ஏழுகிணறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். அருணின் மனைவி, தனது கணவா் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் அடிப்படையிலும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.