மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி
இளம் வீரர்களுடன் ஸ்மித் தலைமையில் ஆஸி. அணி..! பந்துவீச்சு தேர்வு!
சாம்பியன்ஸ் டிராபி 4ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் இளம் ஆஸி. அணி களமிறங்குகிறது.
இதற்கு முன்பு விளையாடிய 5 போட்டிகளில் 3இல் வென்று இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்துகிறது.
கடைசியாக விளையாடிய ஒருநாள் தொடரிலும் ஆஸி. தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா: மேத்திவ் ஷார்ட், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், ஜோஷ் இங்லீஷ், அலெக்ஸ் கேரி, க்ளென் மேக்ஸ்வெல், பென் த்வார்ஷிஸ், நாதன் எல்லீஸ், ஆடம் ஸாம்பா, ஸ்பென்சர் ஜான்சன்.
இங்கிலாந்து: பிலிப் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜாஸ் பட்லர், லியாம் லிவிக்ஸ்டன், பிரைடன் கர்ஸ், ஆதில் ரஷித், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட்.
குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா அணி முன்னிலை வகிக்கிறது. இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கும்.