ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் பாலுணர்வைத் தூண்டும் காளான்!
இமயமலைப் பகுதிகளில் இறந்த அந்துப்பூச்சிகளில் லார்வாக்களில் வளரும் பூஞ்சைக் காளான்கள் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
கார்டிசெப்ஸ் சினென்சிஸ் என்ற இந்தவகைப் பூஞ்சை, ஒரு பாலுணர்வூட்டியாகக் கருதப்பட்டு விற்பனையில் செழித்து வருகிறது. இந்த பூஞ்சையை இமாலயன் வயக்ரா என்றும் கூறுகின்றனர்.
பாலியல் உறவின்போது ஆண், பெண் இருபாலருக்கும் இந்த பூஞ்சை நல்ல பலனளிப்பதாக பெரும்பாலானோர் கூறுகின்றனர். இதுதவிர மூட்டுகள், இதயம், கல்லீரல் சம்பந்தப்பட்ட மருத்துவத்துக்கும் இந்த பூஞ்சை பயன்படுத்தப்படுகிறதாம்.
ஒரு பவுண்டு பூஞ்சையின் விலை சுமார் ரூ. 1.17 கோடிக்கு விற்கப்படுகிறது. இந்த பூஞ்சைக் காளானை வாங்குவதற்கு சீனாவுக்கு பல பணக்காரர்கள் படையெடுக்கின்றனர் (குறிப்பாக இளைஞர்கள்).
அமெரிக்கச் சந்தையில் நுழையும் பூஞ்சைக் காளான்கள் பெரும்பாலும் போலியானதாக இருப்பதால், நேரடியாக சீனாவுக்கே சென்று பலர் வாங்குகின்றனர். இந்த வகை பூஞ்சையைத் தேடுவதையே நேபாளத்தில் பலரும் முழுநேர வேலையாகக் கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க:பெற்றோர்களே உஷார்... குழந்தைகள் கண்காணிப்புக்கு நாளுக்கு ரூ. 10,000 சம்பளம்!