எலான் மஸ்க் மகனின் செயலால் அமெரிக்க அலுவலகப் பாரம்பரியத்தில் மாற்றம்?
அமெரிக்க ஓவல் அலுவலகத்தில் 145 ஆண்டுகள் பழைமையான மேசையை மாற்றியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவில் ஓவல் அலுவலகத்துக்கு அமெரிக்க செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவர் எலான் மஸ்க் தனது 4 வயது மகன் எக்ஸ்-ஏ-ஷியை (X Æ A-Xii) பிப்ரவரி 11ம் தேதி தன்னுடன் அழைத்துச் சென்றார். அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் சந்திப்பின்போது, செய்தியாளர்களுடன் எலான் மஸ்க் பேசினார்.
இந்த நிகழ்வின்போது, அதிபர் டிரம்ப்பை பார்த்து எலான் மஸ்க்கின் மகன் எக்ஸ், சில குறும்புத்தனமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டான். டிரம்ப்பை பார்த்து எக்ஸ் ஏதோ பேசும் விடியோவில் சிறுவனின் வாய் அசைவை வைத்து நெட்டிசன்கள் சிலர், டிரம்ப்பின் வாயை சிறுவன் மூடச் சொன்னதாகக் கூறினர். இதுதொடர்பான விவாதங்களும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியது.
அதுமட்டுமின்றி, எக்ஸ் தனது மூக்கைத் துடைத்து அலுவலக மேசையில் தடவியதும் விடியோவில் பதிவானது. இந்த நிலையில், 145 ஆண்டுகள் பழைமையான அந்த மேசையை அதிபர் டிரம்ப் மாற்றியமைத்துள்ளதாக டிரம்ப் அறிவித்தார்.
சிறுவன் எக்ஸ்-ஏ-ஷியின் அநாகரீக செயலால்தான், அலுவலகத்தின் பாரம்பரிய மேசையை டிரம்ப் மாற்றியதாக சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், மேசை புதுப்பிக்கப்படுவதால் தற்காலிகமாகவே மாற்றியதாக டிரம்ப் கூறினார்.
இதையும் படிக்க:ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் பாலுணர்வைத் தூண்டும் காளான்!