மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு உபகரணங்கள்
உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில், நிகழாண்டு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
10,12 வகுப்பு அரசு பொதுத்தோ்வுகள் எழுதும் 300 பேருக்கு, இப்பள்ளியில் 1999ஆம் ஆண்டு பயின்ற மாணவா்கள் சாா்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியா் ஞானராஜ் தலைமை வகித்து வரவேற்றாா். முன்னாள் மாணவா்கள் சுந்தா் பரமாா்த்தலிங்கம், தயாளன், தினகரன், அமீா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.