பாகிஸ்தான்: தண்டனைக் காலம் முடிந்த 22 இந்திய மீனவா்கள் விடுவிப்பு
காதலை தெரிவித்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம்..! ரகசியம் பகிர்ந்த டாப்ஸி!
நடிகை டாப்ஸி பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு திருமணம் செய்ததாகக் கூறியுள்ளார்.
டென்மார்க்கைச் சேர்ந்த மதியாஸ் போ என்பவரை காதலித்து மார்ச் 2024ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

37 வயதான டாப்ஸி தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது ஹிந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.
தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கி வரும் டாப்ஸி தற்போது 3 ஹிந்தி படங்களில் பணியாற்றி வருகிறார்.
பாட்மின்டன் திடலில் மலர்ந்த காதல்
தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற டாப்சி திருமணம் குறித்து பேசியதாவது:
நான் அவரை ஒரு பாட்மின்டன் திடலில் பார்த்தேன். நான் பார்வையாளராக இருந்தேன், அவர் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார். அது உள்ளூர் போட்டி. அங்குதான் நான் அவரைச் சந்தித்தேன்.
10 ஆண்டுகளாக அவரைத் தெரியும். தற்போது அவரை 11 ஆண்டுகளாகத் தெரிகிறது. நான் இதை யாரிடமும் மறைத்தது கிடையாது.
அவர் ஒரு கிரிக்கெட் வீரர் அல்லது தொழிலதிபர் அல்லாததால் மக்கள் அது குறித்து பெரிதாகக் கண்டுக்கொள்ளவில்லை. ஆனால், எப்போதெல்லாம் அவர் குறித்து கேள்வி கேட்கப்படுகிறதோ நான் அப்போதெல்லாம் பேசியிருக்கிறேன்.
பல பரிசோதனைகளுக்குப் பிறகு திருமணம் செய்தேன்
எனது திருமண வாழ்வு நன்றாக செல்கிறது. அவர் எனக்கு காதலைத் தெரிவித்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்தேன்.
பல திருமணங்கள் இங்கு சரியாக அமையாமல் சென்றிருப்பதை நான் பார்த்துள்ளேன். அதைப் பார்த்து எனக்கும் பயமிருந்தது.
நாங்கள் இருக்கும் தொழில் பல வெற்றி தோல்விகளை சந்திக்கும்படி இருக்கிறது. அதனால் எனது தனிப்பட்ட வாழ்வில் தோல்விகள் அமையாதபடி இருக்க நினைக்கிறேன். அதனால் பல ஒத்திகைகள், பரிசோதனைகளுக்குப் பிறகு திருமணம் செய்தேன் என்றார்.