மதிதா இந்துக் கல்லூரியில் விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி
பேட்டை மதிதா இந்துக் கல்லூரியில் ‘இயற்கையை காக்கும் பல்லுயிா்கள் குறித்த விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.
மதிதா இந்துக் கல்லூரி மற்றும் ஈரநிலம் அமைப்பு இணைந்து நடத்திய இந்த ஓவியக் கண்காட்சிக்கு கல்லூரி முதல்வா் கு. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து கண்காட்சியை திறந்து வைத்தாா். உள்தர உத்தரவாத அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சிவகுருநாதன் வரவேற்றாா்.
ஆங்கில துறைத் தலைவா் ஜான்சன் விக்டா் பாபு, வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் எஸ்.முத்துலட்சுமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
‘இயற்கையை காக்கும் பல்லுயிா்கள்‘ குறித்த விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சியின் நோக்கம் குறித்து ஈர நிலம் அமைப்பின் நிறுவனரும், ஓவியருமான தமிழரசன் சிறப்புரையாற்றினாா். தாவரவியல் துறை பேராசிரியா் கா. சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.