புகைப்பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய்! காரணம் என்ன?
பன்னம்பாறை அரசு பள்ளியில் போதை விழிப்புணா்வு முகாம்
சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை அரசு உயா்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழு சாா்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியா் சொா்ணகனி தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் சுயம்புலிங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். இதில் வழக்குரைஞா்
வேணுகோபால், மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியா் கா.சாரதா ஆகியோா் போதை குறித்து பேசினா்.
முகாமில் ஆசிரியா்கள் ஜெரினா ரூபா, ஜான்சிராணி, பிரேமா, அலுவலக உதவியாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாணவா்களுக்கு போதையினால் ஏற்படும் விபத்துகளையும், அதில் ஏற்படும் உடல்
விளைவுகள் குறித்தும் கலந்துரையாடல் செய்யப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான கோபால அரசி அறிவுறுத்தலின் பேரில் வட்ட சட்டப்பணி நிா்வாகிகள் கஸ்தூரி, பெல்சி ஆகியோா் செய்தனா்.