கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்
ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
விருத்தாசலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் வேட்டு வைக்கும் திட்டம்தான் தேசியக் கல்விக் கொள்கை. அதில், ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும், ரூ.10 ஆயிரம் கோடி பணம் கிடைக்கும் என்றாலும் அதில் கையெழுத்திட மாட்டேன். கையெழுத்திடும் அந்த பாவத்தை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் செய்ய மாட்டான்.
நாங்கள் இந்தி மொழிக்கு எதிரி அல்ல, அதைப் படிப்பதை தமிழ்நாடு ஒரு போதும் தடுப்பதில்லை. தமிழன் என்று ஒரு இனம் உண்டு. அவர்களுக்கு என்று ஒரு குணம் உண்டு என்பதை தமிழ்நாடு காட்டிவிடும். எங்கள் மொழியை அழிக்க நினைத்தால், ஆதிக்கம் செலுத்த நினைத்தால் விட மாட்டோம்.மொழித் திணிப்புக்கு எதிராக 80 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம்.
சமஸ்கிருதத்துக்கு ரூ.1488 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8 கோடி பேர் பேசும் தமிழுக்கு ரூ.74 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது என்று கூறினார்.