நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?
நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக செயல்படுவதாகவும் முன்னுக்குப்பின் முரணான கருத்துகளைக் கூறி வருவதாகவும் தெரிவித்து முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.
இதையும் படிக்க | 'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3-ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் அவர் பெயரின் கீழ் 'சமூக செயற்பாட்டாளர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து காளியம்மாளிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'அனைத்திற்கும் விரைவில் பதில் சொல்கிறேன்' என்று கூறியுள்ளார்.