காளியம்மாள் குறித்த கேள்விக்கு சீமான் பதில்
காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவல் குறித்து கேள்விக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சனிக்கிழமை மதுரை விமான நிலையம் வந்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, எங்கள் கட்சிக்குள் இருக்க விருப்பமில்லை என்றால் வெளியேறுவதற்கு முழு சுதந்திரம் உள்ளது.
தங்கை காளியம்மாள் முதலில் சமூக செயல்பாட்டாளராகதான் இருந்தார். அவரை அழைத்துக் கொண்டு வந்தது நான்தான். பருவக் காலங்களில் இலையுதிர் காலம் என்று இருக்கும் அதுபோல எங்க கட்சிக்கு களைஉதிர் காலம். வருவார்கள் போவார்கள்.
நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?
தங்கைக்கு முழு சுதந்திரம் உள்ளது. இங்கே இருப்பதா? வேறு எந்த கட்சியில் போய் சேருவதா? முடிவெடுக்கும் உரிமை அவருக்கு உள்ளது.
ஒற்றை மொழியை திணித்து இந்த நாட்டின் இறையாண்மை ஒற்றுமையை கூறு போடுகிறீர்கள் என குற்றம் சாட்டுகிறேன்.
விஜயலட்சுமி வழக்கில் நீதிபதி அவர்களது கருத்தை தெரிவித்துள்ளார். விசாரணையில் அது குறித்து முழுமையாக தெரியவரும் என்றார்.