திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா
மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 64,360-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையான நிலையில், கடந்த சில நாள்களாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
அதிரடியாக வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து நேற்று ரூ. 360 குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எஃப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் பதவியேற்பு!
சனிக்கிழமை காலை நிலவரப்படி, சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 64,360-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 8,045-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.108-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனையாகிறது.