மார்ச் 28 முதல் நிஃப்டியில் நுழையும் ஜியோ பைனான்சியல், சோமேட்டோ!
புதுதில்லி: ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் மற்றும் ஜொமாட்டோ லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வரும் மார்ச் 28 முதல் தேசிய பங்குச் சந்தையின் பெஞ்ச்மார்க் நிஃப்டி 50 குறியீட்டில் நுழைய உள்ளது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆகியவை குறியீட்டிலிருந்து நீங்கப்படும் என்று தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
அதே வேளையில், அரையாண்டுக்கு ஒரு முறை நிப்டி50 இன்டெக்ஸ் மறுசீரமைப்பு செய்யப்படும். என்எஸ்இ இன்டெக்ஸ் லிமிடெட், இன்டெக்ஸ் பராமரிப்பு துணைக் குழு இந்த பணியை மேற்கொள்ளும்.
இது இன்டெக்ஸ் அல்லது பட்டியலில் இடம் பெற்றுள்ள பங்குகளை மதிப்பீடு செய்து, நீக்க வேண்டிய பங்குகளை நீக்கியும் சேர்க்க வேண்டிய பங்குகளையும் சேர்த்து விடும். இது மார்ச் 28, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: இந்திய ஜவுளி ஏற்றுமதி 14% அதிகரிப்பு