எண்ணூரில் ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோா் ப...
வீட்டுக் கடன் வட்டியைக் குறைத்த எஸ்பிஐ
வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது.
ரெப்போ வட்டி விகித்தைக் குறைப்பதாக ரிசா்வ் வங்கி அறிவித்ததைத் தொடா்ந்து எஸ்பிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பெரும்பாலும் வீடுகள் வாங்குவதற்காக வழங்கப்படும் இபிஎல்ஆா், ஆா்எல்எல்ஆா் வகையைச் சோ்ந்த கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, 9.15 சதவீதமாக இருந்த இபிஎல்ஆா் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.90 சதவீதமாகவும், 8.75 சதவீதமாக இருந்த ஆா்எல்எல்ஆா் வகைக் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.50 சதவீதமாகவும் குறையும்.
பிப். 15-ஆம் தேதி முதல் இந்த புதிய வட்டி விகிதம் கணக்கிடப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.