இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.86.71 ஆக முடிவு!
மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.86.71 ஆக முடிவடைந்தது. தொடர்ச்சியாக அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் அமெரிக்க நாணய குறியீட்டில் மீட்சி ஆகியவற்றால் இது வெகுவாக எடை போட்டது.
பலவீனமான உள்நாட்டு சந்தைகள் மற்றும் அமெரிக்க டாலர் குறியீட்டில் ஏற்பட்ட மீட்சி காரணமாக வெள்ளிக்கிழமை அன்று இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது என்று அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இருப்பினும், பலவீனமான கச்சா எண்ணெய் விலைகள் சரிவை குறைத்தன.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.86.50 ஆக தொடங்கி, பிறகு குறைந்தபட்சமாக ரூ.86.77 ஆக சரிந்து, பிறகு ரூ.86.71 ஆக முடித்தது. இது அதன் முந்தைய முடிவில் இருந்து 7 காசுகள் சரிவு.
நேற்றைய வர்த்தகத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 34 காசுகள் உயர்ந்து ரூ.86.64-ஆக முடிந்தது.
இதையும் படிக்க: அந்நிய நிதி வெளியேற்றம்! சென்செக்ஸ் 420, நிஃப்டி 117 புள்ளிகள் சரிந்து முடிவு!