சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
விம்கோ நகர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில்,
'விம்கோ நகர் ரயில் நிலையத்தில் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று(பிப்.22) இரவு 10 மணி முதல் நாளை (பிப்.23) காலை 6 மணி வரை நீல வழித்தடத்தில் உள்ள விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மட்டும் மெட்ரோ ரயில்கள் சேவை நிறுத்தப்படுகிறது.
இதையும் படிக்க | 'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!
இதன்விளைவாக, நீல வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் சேவைகள், விமான நிலையம் முதல் விம்கோ நகர் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.