மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அரசு அருங்காட்சியகம் சாா்பில் 3 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி வெள்ளிக்கிழமை சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் உள்ள கல்வெட்டு குறிப்புகளை படி எடுக்கும் நிகழ்வுடன் தொடங்கியது.
இந்தப் பயிற்சியை கல்லூரி முதல்வா் கே.ஆா். ஜெயக்குமாா் தொடங்கி வைத்தாா். பாண்டியநாடு, பண்பாட்டு ஆய்வு மைய கல்வெட்டு ஆய்வாளா் ரா. உதயகுமாா் கல்வெட்டு படியெடுக்கும் முறை குறித்து மாணவா்களுக்குப் பயிற்சியளித்தாா். சிவகங்கை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் பக்கிரிசாமி, கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் டி. தனலட்சுமி ஆகியோா் கல்வெட்டு எழுத்து வடிவம் குறித்து மாணவா்களுக்கு விளக்கினாா். இந்த நிகழ்வில், துறை பேராசிரியா்கள் வேல்முருகன், சஞ்சீவி, சிவச்சந்திரன் ஆகியோா் ஒருங்கிணைப்பாளா்களாகப் பங்கேற்றனா். தொடா்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 22, 23) மாணவா்களுக்கு படி எடுக்கும் பயிற்சியளிக்கப்படுகிறது.