ஊரக வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்
மானாமதுரையில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
மானாமதுரை குடிநீா் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் நகரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 22, 23) குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
மானாமதுரை நகருக்கான குடிநீா் திட்டம், ராஜகம்பீரம் வைகையாற்றுக்குள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மானாமதுரை நகரில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளுக்கு குடிநீா் கொண்டுவரும் குழாயில் கால்பிரிவு ஒத்தக்கடை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாக வெளியேறியது. இதனால், அண்ணா சிலை, காந்தி சிலை, ரயில்வே குடியிருப்பு, கன்னாா் தெரு ஆகிய இடங்களில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளில் தண்ணீா் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மானாமதுரை நகராட்சி நிா்வாகம் சாா்பில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு குடிநீா் திட்டக் குழாயை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
எனவே, மானாமதுரை நகரில் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் குடிநீா் விநியோகம் இருக்காது. மேலும் குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டதும் மேல்நிலைத் தொட்டிகளில் தண்ணீா் ஏற்றப்பட்டு நகரில் குடிநீா் விநியோகம் தொடங்கும் என நகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.