கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்
ஒரேமாதிரி ஆட்டமிழக்கும் விராட் கோலி..! விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்!
விராட் கோலி ஆட்டமிழக்கும் விதம் ஒரே மாதிரியாக இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
36 வயதாகும் விராட் கோலி பிஜிடி தொடரிலிருந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். டெஸ்ட்டில் அவுட் சைடு ஆஃப் பந்தில் 9 முறை ஆட்டமிழந்தார்.
அதேபோல் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 6ஆவது முறையாக சுழல்பந்துகளிலும் ஆட்டமிழந்து வருகிறார்.
வங்கதேசத்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ரிஷாத் ஹொசைன் ஓவரில் ஆட்டமிழந்தார்.
கடைசி 11 டெஸ்ட்டில் 440 ரன்கள், 6 ஒருநாள் போட்டிகளில் 137 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சுனில் கவாஸ்கர் பேட்டி ஒன்றில் கூறியதாவது:
விராட் கோலி, கவர் டிரைவ் ஷாட் அடிக்க பேட் பேஸை மிகவும் திறந்து விளையாடுவதால் அவருக்கு பிரச்னை ஏற்படுகிறது. அவர் நிச்சயமாக இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆட்டமிழக்கும் முன்பாகவும் சிலமுறை ரிஷாத் பந்துவீச்சில் பேட் பேஸை திறந்து விளையாடும்போது பந்து திரும்பியபோது அதிர்ஷ்டவசமாக ஆட்டமிழக்காமல் தப்பினார்.

அதனால் நிச்சயமாக இதை விராட் கோலி சரிசெய்தாக வேண்டும்.
ஒரேமாதிரியான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆட்டமிழப்பது சற்று கவலைக்கிடமானது என்றார்.
நாளை (பிப்.23) இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுவது குறிப்பிடத்தக்கது.