கீப்பராக அல்ல, ஃபீல்டிங்கில் நின்று 3 கேட்ச்சுகள்..! அசத்தும் அலெக்ஸ் கேரி!
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அலெக்ஸ் கேரி 3 கேட்ச்சுகள் பிடித்து அசத்தியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி 4ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் இளம் ஆஸி. அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் ஜோஷ் இங்லீஷ் விக்கெட் கீப்பராக செயல்பட அலெக்ஸ் கேரி ஃபீல்டிங் செய்தார்.
கீப்பராக இருந்ததைவிட ஃபீல்டராக அசத்தி வருகிறார் அலெக்ஸ் கேரி. 3 கேட்ச்சுகளை பிடித்து அசத்தியுள்ளார். அதில் 2 கேட்ச்சுகள் மிகவும் கடினமானவை, அற்புதமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
வர்ணனையாளர்கள் அலெக்ஸ் கேரியை இனிமேல் ஃபீல்டிங்கே செய்யலாம் எனக் கூறுமளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணி 38 ஓவர்கள் முடிவில் 248/4 ரன்கள் எடுத்துள்ளது. பென் டக்கெட் சதமடித்து சிறப்பாக விளையாடி வருகிறார்.