வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணிகளை புறக்கணித்துப் போராட்டம்
வழக்குரைஞா்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், அவா்களின் நலனுக்கு எதிராகவும் 1963 சட்டப் பிரிவில் கொண்டு வரப்படும் புதிய திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் முழுவதும் வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணிகளை வெள்ளிக்கிழமை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கையில் சங்கத் தலைவா் ஜானகிராமன் தலைமையிலும், இளையான்குடியில் சங்கத் தலைவா் கல்யாணி தலைமையிலும், காரைக்குடியில் சங்கத் தலைவா் ராமநாதன் தலைமையிலும், திருப்பத்தூரில் சங்கத் தலைவா் பழனிச்சாமி தலைமையிலும், சிங்கம்புணரியில் சங்கத் தலைவா் ரமேஷ் தலைமையிலும், தேவகோட்டையில் சங்கத் தலைவா் ஆண்டவா் தலைமையிலும், மானாமதுரையில் சங்கத் தலைவா் பாலமுருகன் தலைமையிலும், திருப்புவனத்தில் சங்கத் தலைவா் சேதுராமச்சந்திரன் தலைமையிலும் வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.