செய்திகள் :

வழியெங்கும் திரண்டு வாரியணைத்துக் கொண்ட கடலூர்!

post image

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறாா். அந்த வகையில், 2 நாள் பயணமாக கடலூருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.21) வருகை தந்த முதல்வருக்கு மக்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்த நிலையில், வழியெங்கும் திரண்டு வாரியணைத்துக் கொண்ட கடலூர்! என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு விழாவில் முதல்வா் பங்கேற்று, பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்து, அரசின் நலத் திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதைத் தொடா்ந்து, மாலை 6.30 மணியளவில் நெய்வேலி புறப்பட்ட முதல்வர்,அங்கு சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ ஏற்பாட்டில் மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெறும் நிகழ்ச்சியில், சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் விருந்தினா் இல்லத்தில் முதல்வா் தங்குகினார்.

முன்னதாக கடலூர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பொதுமக்கள் முதல்வருடன் கை குலுக்கியும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடலூர் பயணம் குறித்தும், மக்கள் அளித்த வரவேற்பு குறித்தும் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

யார் அந்த சார்.. பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் 7 திருட்டு வழக்குகளில் கைது

அதில், வழியெங்கும் திரண்டு வாரியணைத்துக் கொண்ட கடலூர்!

நலத்திட்ட உதவிகளோடு, முத்தான பத்து புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளேன்.

நீதிக்கட்சியின் முதல் முதலமைச்சரைத் தந்த மண்ணிலிருந்து, அநீதியின் ஒட்டுமொத்த உருவமாகத் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசின் அட்டூழியங்களை மக்கள் முன் பட்டியலிட்டேன்! என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வேப்பூரை அடுத்துள்ள திருப்பெயா் பகுதியில் சனிக்கிழமை (பிப்.22) தமிழ்நாடு மாநில பெற்றோா் ஆசிரியா் கழகம் நடத்தும் ‘பெற்றோரை கொண்டாடுவோம்’ நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, 234/77 கள ஆய்வு காணொலி, தமிழ்நாடு பெற்றோா் ஆசிரியா் கழக செயலி, விழா மலா் ஆகியவற்றை வெளியிட்டு, அரசு பள்ளிக் கட்டடங்களை திறந்துவைத்து பேசுகிறாா்.

முதல்வா் இரண்டு நாள் பயணமாக கடலூா் மாவட்டம் வந்துள்ளதையொட்டி, பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பனிச் சரிவில் சிக்கிய வீரர் பலி! ஒரே வாரத்தில் 4வது மரணம்!

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் விளையாட்டின் போது பனிச் சரிவில் சிக்கிய பனிச்சறுக்கு வீரர் பலியாகியுள்ளார்.கொலராடோவின் க்ரெஸ்டடு பட்டே பகுதியைச் சேர்ந்த சாரா ஸ்டெயின்வாண்ட் (வயது 41) என்ற பனிச்சறுக்... மேலும் பார்க்க

திரிணாமுல் காங். நிர்வாகி அடித்துக் கொலை!

மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் திரிணாமுல் காங். நிர்வாகி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.பிர்பூம் மாவட்டத்தின் கன்கராத்தாலா பகுதியிலுள்ள பேருந்து நிறுத்ததின் அருகில் திரிணாமுல் காங். நிர்வ... மேலும் பார்க்க

வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்தில் கும்பல் தலைவனை சுட்டுக்கொன்றவர் கைது!

இலங்கையில் பிரபல கொலைகார கும்பலின் தலைவனை வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்தினுள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி மற்... மேலும் பார்க்க

மகாகும்பமேளா: புனித நீராடிய ஆளுநர் ஆர்.என்.ரவி

பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(சனிக்கிழமை) புனித நீராடினார்.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இர... மேலும் பார்க்க

கண்ணிவெடி விபத்தில் இந்திய வீரர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த கண்ணிவெடி விபத்தில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக் கோடு உள்ள நாங்கி-தகேரி பக... மேலும் பார்க்க

ஊரக வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் 2024-25 ஆம் ஆண்டில் ... மேலும் பார்க்க