டிடி நெக்ஸ்ட் லெவல்: முதல் பாடல் ரிலீஸ் தேதி!
நாயகனாக நடிக்க ஆரம்பித்த சந்தானத்திற்கு சில படங்கள் தோல்வியைக் கொடுத்தாலும் தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டன்ஸ், பாரிஸ் ஜெயராஜ், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்கள் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமானது.
தற்போது, டிடி ரிட்டன்ஸின் அடுத்த பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் (DD next level) படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக சமீபத்தில் இதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பிரேம் ஆனந்த இயக்கும் இப்படத்தில் கௌதம் மேனன், செல்வராகவன், மாறன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சமீபத்தில் நடிகர் சந்தானம் டப்பிங் பணிகளை தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் முதல் பாடல் வரும் பிப்.26ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்படம் மே மாத வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
