செய்திகள் :

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,572 கோடி டாலராக சரிவு

post image

கடந்த 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 63,572.1 கோடி டாலராகக் குறைந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:பிப். 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 254 கோடி டாலா் குறைந்து 63,572.1 கோடி டாலராக உள்ளது.பிப். 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 765.4 கோடி டாலா் உயா்ந்து 63,826.1 கோடி டாலராக இருந்தது.கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 70,488.5 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டிருந்தது. அது தொடா்ந்து அதிகரித்து வந்தாலும், உலகளாவிய பொருளாதாரச் சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக அந்நியச் செலாவணியை ரிசா்வ் வங்கி பயன்படுத்துவதால் அதன் கையிருப்பு அவ்வப்போது குறைந்துவருகிறது.

கடந்த 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 451.5 கோடி டாலா் குறைந்து 53,959.1 கோடி டாலராக உள்ளது.டாலா் அல்லாத யூரோ, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகள் ஆகும்.மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 194.2 கோடி டாலா் அதிகரித்து 7,415 கோடி டாலராக உள்ளது. சிறப்பு பெறுதல் உரிமைகள் (எஸ்டிஆா்) 1.9 கோடி டாலா் அதிகரித்து 1,789.7 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 1.4 கோடி டாலா் அதிகரித்து 408.3 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ரூ.1.90 லட்சம் விலை குறைந்த இத்தாலிய பைக்

இத்தாலிய நிறுவனமான மோட்டோ மொரினியின் சேயேமெஸோ பைக்கின் விலை இந்தியச் சந்தையில் ரூ.1.90 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது.இது குறித்து சந்தை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:இந்தியாவில் விற்பனையாகும் மோட்டோ மோரினோ... மேலும் பார்க்க

2024 -ஆம் ஆண்டு தரவுத் தொகுப்புகள் பதிவேடுகள்: தேசிய புள்ளியியல் துறை வெளியிட்டது

நமது சிறப்பு நிருபா் நாட்டின் பல்வேறு தகவல்களை அளிக்கும் 2024 - தரவுத்தொகுப்புகள், பதிவேடுகளின் தொகுப்பின் புதிய பதிப்பை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த தர... மேலும் பார்க்க

மார்ச் 28 முதல் நிஃப்டியில் நுழையும் ஜியோ பைனான்சியல், சோமேட்டோ!

புதுதில்லி: ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் மற்றும் ஜொமாட்டோ லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வரும் மார்ச் 28 முதல் தேசிய பங்குச் சந்தையின் பெஞ்ச்மார்க் நிஃப்டி 50 குறியீட்டில் நுழைய உள்ளது.பாரத் பெட்ரோல... மேலும் பார்க்க

இந்திய ஜவுளி ஏற்றுமதி 14% அதிகரிப்பு

இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி கடந்த ஜனவரி மாதத்தில் 13.88 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜனவரி மா... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.86.71 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.86.71 ஆக முடிவடைந்தது. தொடர்ச்சியாக அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் அமெரிக்க நாணய குறியீட்டில் மீட்சி ஆகியவற்றால் இது வெக... மேலும் பார்க்க

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 420 புள்ளிகளும், நிஃப்டி 22,800 புள்ளிகளுக்கு கீழே முடிவு!

மும்பை: அந்நிய நிதி வெளியேற்றம், பலவீனமான அமெரிக்க சந்தைகள் மற்றும் கட்டண அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், வாரத்தின் கடைசி நாளான இன்று பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்... மேலும் பார்க்க