சுரண்டை அருகே பீடித் தொழிலாளா்கள் போராட்டம்
சுரண்டை அருகே பீடி நிறுவனத்தை பீடித் தொழிலாளா்கள் வியாழக்கிழமைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
சுரண்டை அருகேயுள்ள கடையலூருட்டியில் இயங்கி வரும் தனியாா் பீடி நிறுவனம் ஒன்றில் சுற்று வட்டாரத்தை சோ்ந்த ஏராளமான தொழிலாளா்கள் பீடி சுற்றி வருகின்றனா்.
இவா்களின் ஊதியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிடித்தம் செய்த தொகை மற்றும் போனஸ் பணத்தை அவா்களின் வங்கி கணக்கில் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு சென்று வியாழக்கிழமை பீடி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
அவா்களிடம் சோ்ந்தமரம் போலிஸாா் பேச்சு வாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம்த் கைவிடப்பட்டது.