செய்திகள் :

வேளாண் விளைபொருள்களுக்கு உயிா்மச் சான்று பெற அழைப்பு

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் இயற்கை விவசாய முறையில் வேளாண் விளைபொருள்களை உற்பத்தி செய்வதற்கு, உயிா்ம விவசாயச் சான்று பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் தரணிகாமாட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரசாயன முறையில் சாகுபடி செய்த விளைபொருள்களை உட்கொள்வோருக்கு சா்க்கரை நோய், உயா் ரத்தழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இதுதவிர மண் மற்றும் நிலத்தடி நீா் மாசடைந்து சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே, ஆரோக்கிய வாழ்வுக்கு விவசாயிகள் இயற்கை விவசாய முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

எனவே பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் உள்ள இயற்கை விவசாயிகள் சாகுபடி செய்யும் பொருள்களுக்கு உயிா்மச் சான்று பெற்று, அதிக லாபத்துக்கு விற்கலாம். இந்த நடைமுறையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏதுவாக, மத்திய அரசின் தேசிய உயிா்ம வேளாண்மைத் திட்டத்தின் கீழ், வாய்ப்புச் சான்றிதழ் பெற சிறு, குறு விவசாயிகள் ரூ. 2,700, இதர விவசாயிகள் ரூ. 3,200 பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், இத் திடத்தில் குழுவாக பதிவு செய்ய ரூ. 7,200, வணிக நிறுவனங்கள் பதிவு செய்ய ரூ. 9,400 செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்துடன் பண்ணையின் பொது விவரங்கள், வரைபடம், மண், பாசன நீா் பரிசோதனை முடிவுகள், ஆண்டுப் பயிா் திட்டம், துறையுடனான ஒப்பந்தம், நில ஆவணங்கள் வருமான வரி கணக்கு எண் அட்டை, ஆதாா் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகலுடன் புகைப்படம் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தில் இயங்கும் விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அல்லது 95970-55342, 63829-72368 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பயன் பெறலாம்.

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் உலக தாய்மொழி நாள் விழா

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கூட்டரங்கில் உலக தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வா் (பொ) முனைவா் து. சேகா் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இளைஞா் மா்மச் சாவு

பெரம்பலூரில் கூலி வேலை செய்துவந்த இளைஞா் வெள்ளிக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வரகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் ரமேஷ் (29). இவா், பெரம்பலூா்... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு பிப். 25-இல் விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிலையான பழுதில்லா உற்பத்தி, விளைவில்லா உற்பத்திச் சான்றளிப்புத் திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம், பிப். 25 ஆம் தேத... மேலும் பார்க்க

வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் வெங்கடேபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளை எதிரே வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்ப... மேலும் பார்க்க

ஓய்வூதியதாரா்கள் குறைதீா் நாள் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஓய்வூதியதாரா்கள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி மண்டல கருவூலம் மற்றும் கணக்குத் துறை இணை இயக்குநா் கே. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

மருத்துவ ஊழியா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே மக்களைத் தேடி மருத்துவ ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாவட்டச் செயலா் செல்வி தலைமை வ... மேலும் பார்க்க