வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் வெங்கடேபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளை எதிரே வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முத்துராஜா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். விவசாயிகளின் கடன் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். சேமிப்புக் கணக்குகளின் வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். வங்கி அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.