முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
பெரம்பலூரில் இளைஞா் மா்மச் சாவு
பெரம்பலூரில் கூலி வேலை செய்துவந்த இளைஞா் வெள்ளிக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வரகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் ரமேஷ் (29). இவா், பெரம்பலூா் வெங்கடேபுரத்தில் வாடகை வீட்டில் தங்கிக்கொண்டு, கடந்த 3 ஆண்டுகளாக தனியாா் வங்கிக் கிளையில் முகவராக பணிபுரிந்தாா். இந்நிலையில் குடும்பப் பிரச்னையால் கடந்த 2 மாதங்களாக வங்கி பணிக்குச் செல்லாமல் கூலி வேலைக்குச் சென்ாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் மயங்கி கிடந்த ரமேஷை, அவருடன் தங்கியிருந்த செந்தில்முருகன் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது ரமேஷ் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.